செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

வாழ்த்துக்கள் சாரு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

பின் நவீனத்துவ தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க,சொல்லப்போனால் முதன்மையான எழுத்தாளர் சாருநிவேதிதா. நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்களில் அவருக்கு எப்பொழுதுமே இடம் உண்டு. சொல்லப்போனால் அவர் என் குரு. எனக்கு மட்டுமல்ல. தமிழில் எழுதத் துவங்கும் எவருக்குமே அவர் மிகச்சிறந்த முன்னோடி. அதுவும் நாம் சுஜாதா வை இழந்து விட்ட இந்த தருணத்தில்.
அவர் எனக்கு முதலில் அறிமுகமானது இணையம் வழியாகத்தான்.என் நண்பர் ஒருவர் மிக்க படித்தவர்.பண்பாளர். வீட்டினுள் மிகப்பெரிய நூலகம் வைத்திருப்பவர்.சைவ மத வழி வந்தவராவர். அவர் தான் எனக்கு சாருவின் இணைய தளத்தை அறிமுகப்படித்தினார். அதற்காக நான் என்றென்றும் அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.

சாருவின் புத்தகங்களை எங்கே வாங்குவது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த போது, அவர் தான் உயிர்மையில் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கினார். அடுத்த நாள் அந்த புத்தகத்தை என்னிடம் தந்து, லட்சியம் இல்லாத எழுத்துக்கு சிறந்த உதாரணம் இந்த நாவல்தான். தயவு செய்து நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த லட்சியம் இல்லாத எழுத்தை நான் படித்ததின் விளைவுதான் நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

அந்த நாவலை முதலில் நான் படித்தது அதில் இருந்த பாலியல் வார்த்தைகளுக்காகத்தான்.(வயசு அப்படி!) பின்பு அதை படிக்க படிக்க சொல்லொனாத் துயரம் ஏற்பட்டது. பின்பு அதை மறுபடி மறுபடி வாசித்தேன். இன்று வரை அதை எப்பொழுது படித்தாலும் இனம் புரியாத உணர்வே ஏற்படுகிறது.

சரி. இப்பொழுது அதற்கு என்ன? ஒன்றுமில்லை. சாருவின் அந்த நாவல் ஜீரோ டிகிரி. அது இப்பொழுது கலிபோர்னியா ஸ்டேட் யுனிவெர்சிட்டி யில் Comparative World Literature என்ற பிரிவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. http://www.calstate.edu/ இது பற்றி தெரிவித்திருப்பவர் சாரு தான். எவ்வளவு அவமானகரமான விஷயம் இது. ஒரு தமிழ் எழுத்தாளருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய இந்த கௌரவத்தை அவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் தான் இன்று தமிழ் சமூகம் உள்ளது. http://www.charuonline.com/Feb2010/narseythi.html

இது ஏதோ விஜய்க்கு டாக்டர் பட்டம் கிடைத்தது போன்ற செய்தி அன்று. தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்குமே கிடைத்த கௌரவமாக இதை கருத வேண்டும்.

நம் தமிழ் நாட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவமே கிடைக்காது. விஜய் போன்றவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளருக்கு கிடைப்பதில்லை. இது எல்லாம் நன்றாக தெரிந்தவர்தான் சாரு. இருந்தும் தமிழில் விடாமல் எழுதுகிறார்.

அந்த பதிவின் கடைசியில் ஒரு நல்ல விஷயம் கூறியுள்ளார். அதை அப்படியே பிடித்து எங்காவது சென்று விடுங்கள் சாரு!ரஹ்மான் மாதிரி. நாங்கள் எட்டி நின்று பார்க்கிறோம். வழக்கம் போல் கருணாநிதி யை பாராட்டி விட்டு, வேட்டைக்காரன் படத்தை ப்ளாக்கில் பார்த்து, குமுதத்தில் மூழ்கி கிடப்போம். வாழ்த்துக்கள் சாரு.

14 கருத்துகள்:

sukumaran.v.m சொன்னது…

congrats idhuku kasu ethavadu kidakuma saruvuku

Ashok D சொன்னது…

வாழ்த்துகள் ண்ணா(சாரு) :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//நம் தமிழ் நாட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவமே கிடைக்காது. விஜய் போன்றவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளருக்கு கிடைப்பதில்லை. இது எல்லாம் நன்றாக தெரிந்தவர்தான் சாரு. இருந்தும் தமிழில் விடாமல் எழுதுகிறார்//

தமிழ் நாடென ஏன் ? ஓரவஞ்சகம் செய்கிறீர்கள். முழுத் தமிழுலகும் சினிமாக்காரனுக்குக் கொடுக்கும்
மதிப்பைத் தமிழெழுத்தாளனுக்குக் கொடுப்பதே இல்லை.
சாரு - தவிர்க்க முடியாத தமிழ் ஆளுமை! நாம் பெருமையுறலாம்.

Baski.. சொன்னது…

சாருக்கு வாழ்த்துக்கள்
bhuvanesh - welcome

ராம்ஜி_யாஹூ சொன்னது…

பகிர்ந்தமைக்கு நன்றிகள், சாருவிற்கு வாழ்த்துக்கள்.

ஆனால் சாரு இங்கே பதிவுலகில் எழுதினால் வெளிநாட்டு வாசகர்கள், வசிப்போருக்கு தான் செய்தி போகும்,

எனக்கு தெரிந்து அமைச்சர் பொன்முடியோ அல்லது அண்ணன் அமைச்சர் தங்கம் தென்னரசோ , சுமதி அக்கா (தமிழச்சி தன்கப்பண்டியன்) பதிவுகள் அதிகம் படிப்பது இல்லை. கனிமொழி அக்காவும் பதிவு படிப்பதாக தெரியவில்லை, ஆர்குட் பயன் படுத்துகிறார்.

எனவே சாரு அல்லது சாருவின் நண்பர்கள் செய்ய வேண்டியது இது குறித்து பள்ளி கல்லூரி துறை அலுவலகத்தில் சாரு நூல்கள் குறித்து தெரியப் படுத்த வேண்டும், எழுத வேண்டும்.

கனி மொழி அக்காவிடமோ, சுமதி அக்காவிடமோ சாரு recommendation kku போக மாட்டார் என்று எனக்கு தெரியும்.

பெயரில்லா சொன்னது…

how d u believe all these things. American universities are not the greatest reforming centres in the world. they give more important to sex. we dont know how far it is true and reliable. i feel pity on you

பெயரில்லா சொன்னது…

எதாயானும் ஆராய்ந்து எழுதவும்.உன்னை எல்லாம் நினைத்தால் சிரிப்பாக வருகிறது.சினிமா ரசிகனே பரவாயில்லை.இதைப்பற்றிய மேலதிக விவரங்களை கூடிய விரைவில் எதிர்க்கட்சியில் இருந்து எதிர்பாருங்கள்.கிணற்றுத் தவளையக இருக்காதே...கடப்பாரை கந்தன்

பெயரில்லா சொன்னது…

Will you be able to give the "Actual Link" stating the above news ? I Searched and talked to one of the friend who studies there. crap... they are too bad ;) they dont even know such a important adn Historic thing happened

Charu Niveditha சொன்னது…

Namakku name thittamaa ? vaazththugaL

ஆசிர் சொன்னது…

இன்று சச்சின் அடித்த ரன்களை சில நாட்கள் பேசுவார்கள்.. இவர்களுக்கு டிவியில் வரும் நிகழ்ச்சிகள் தான் முக்கியம்..

பெயரில்லா சொன்னது…

டியர் சாரு
உங்கள் நிலையை நினைத்து வருந்துகிறேன்,
ஒரு புறம் உங்கள் நாவலுக்கு கிடைத்த அங்கீகாரத்தை நீங்களே உலகுக்கு வெளிப்படுத்த வேண்டியுள்ளது ,
மறுபுறம்
//அனைவருக்கும் வணக்கம்.நாட்டில் பொழுது போகாமல் கணிணியை வெறுத்து பார்த்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட படியாலும்,எனக்கும் வேறு வேலை இல்லாத காரணத்தாலும், இந்த வலைப்பூவை ஆரம்பித்தே தீர வேண்டும் என்று ஒசாமா....... மன்னிக்கவும்...ஒபாமா(அவர் எங்கள் குடும்ப நண்பர்)........கேட்டுக்கொண்டதாலும்,(நேற்று இரவுதான் தமிழ் படம் பார்த்தேன்..அந்த ஹேங்ஓவர்....... விமர்சனம் விரைவில்) இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.நம் தமிழ் நாட்டில் எதை செய்தாலும் யாருக்காவது டேடிகட் செய்தே தீர வேண்டும் என்பது பாரம்பரியம்.நான் இந்த வலைப்பூவை என்ஒன்று விட்ட சித்தப்பாவின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகளின் முதல் குழந்தைக்கு டேடிகட் செய்கிறேன். இனி வேட்டை ஆஆஆஆஆஆஆஆஆஅரம்பம். //

இந்த காரணத்துக்காக எல்லாம் பதிவு எழுதுபவர்களின் வாழ்த்துக்களை எல்லாம் EXPOSE செய்ய வேண்டியுள்ளது
இது உங்களுக்கு பிடித்த ஒருவரின் வாழ்த்தாக இருந்தாலும் எங்கள் எழுத்தாளரை அவமதிப்பதாக உள்ளது

வாழ்த்துக்களுடன் உங்கள் வாசகன் :(

Kris சொன்னது…

The Zero degree Novel is a scrap, not that I’m jealous of him but it’s truly a useless novel, He is just making it for publicity. The novel is truly an exaggeration if you have come across. Especially the “avanthikas letter”. Unrealistic. Charu is over tempted.

jRamshi சொன்னது…

I am a student of CSU; nobody here is aware of any translated novel by a Tamil writer being referred to as text book.

buvanesh சொன்னது…

Dear jramshi,
இது குறித்து நான் சாருவிற்கு மெயில் அனுப்பியுள்ளேன். பதில் கிடைத்தவுடன் மேற்கொண்டு எழுதுகிறேன்.

அன்புடன்,
புவனேஷ்