சனி, 20 பிப்ரவரி, 2010

தண்டச்சோறு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முன் குறிப்பு:
இந்த கவிதை(?) என் பத்தொன்பதாவது ஆவது வயதில் எழுதப்பட்டது.

மொட்டை வெய்யில் அலைச்சல்
எழுதி குவித்த நூறு அப்ளிகேசன்கள்
பதில் சொல்லி அலுத்த ஆயிரம் இன்டர்வ்யூ கேள்விகள்
தோல்விகளையெல்லாம் வெற்றியின்
படிக்கற்களாக மாற்றிட நினைத்தாலும்
ஒவ்வொரு முறையும் கூசித்தான் போகிறேன்
"இன்னும் கொஞ்சம் சாதம் போடுமா!" எனும் பொழுது.

பின் குறிப்பு:
இந்த கவிதை(மறுபடியும்...........?) ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்டது.பிரசுரம் ஆனதா என்று தெரியவில்லை.ஏனென்றால் அப்பொழுது எனக்கு அட்ரஸே இல்லை.பிரசுரம் ஆகியிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Very nice

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இது கவிதையோ என்னவோ தெரியவில்லை; ஆனால் உள்ளடக்கம் அருமை.
ஏனேனில் நானும் என் இளமையில் நாள்தோறும் கூசியவன், குறுகியவன்.

பெயரில்லா சொன்னது…

நன்றாக முயற்சித்திருக்கிறீர்கள் சாரு. உங்கள் தளம் ஏன் முடங்கிக் கிடக்கிறது

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை

பகிர்வுக்கு நன்றி

வாழ்த்துக்கள்