வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அனைவருக்கும் வணக்கம்.நாட்டில் பொழுது போகாமல் கணிணியை வெறுத்து பார்த்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட படியாலும்,எனக்கும் வேறு வேலை இல்லாத காரணத்தாலும், இந்த வலைப்பூவை ஆரம்பித்தே தீர வேண்டும் என்று ஒசாமா....... மன்னிக்கவும்...ஒபாமா(அவர் எங்கள் குடும்ப நண்பர்)........கேட்டுக்கொண்டதாலும்,(நேற்று இரவுதான் தமிழ் படம் பார்த்தேன்..அந்த ஹேங்ஓவர்....... விமர்சனம் விரைவில்) இந்த வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.நம் தமிழ் நாட்டில் எதை செய்தாலும் யாருக்காவது டேடிகட் செய்தே தீர வேண்டும் என்பது பாரம்பரியம்.நான் இந்த வலைப்பூவை என்ஒன்று விட்ட சித்தப்பாவின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகளின் முதல் குழந்தைக்கு டேடிகட் செய்கிறேன். இனி வேட்டை ஆஆஆஆஆஆஆஆஆஅரம்பம்.

1 கருத்து:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//நான் இந்த வலைப்பூவை என்ஒன்று விட்ட சித்தப்பாவின் இரண்டாவது மனைவியின் மூன்றாவது மகளின் முதல் குழந்தைக்கு டேடிகட் செய்கிறேன்//

இந்த் ஆரம்பமே கலக்கல்.