செவ்வாய், 2 மார்ச், 2010

ராச லீலை?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
இப்பொழுதுதான் சன் நியூஸ் பார்த்துவிட்டு சுடச்சுட எழுதுகிறேன்.மற்றுமொரு சாமியார் scandal . இம்முறை மாட்டியிருப்பது சுவாமி(?) நித்யானந்தா .அதிர்ச்சியாக உள்ளது.ஒரு தமிழ் நடிகையுடன் இருக்கும் படுக்கையறை காட்சியை காட்டுகிறார்கள்.அந்த நடிகையின் முகத்தை மறைத்துவிட்டு,பெயர் R இல் தொடங்கும் என்கிறார்கள்.அது என்ன ஓரவஞ்சனை? சாமியாரை காட்டும்பொழுது நடிகையை காட்டக்கூடாதா?என்ன மீடியா தர்மம் என்று தெரியவில்லை.முழுதாக பார்க்கவில்லை.நித்யானந்தா தானா? என்று உறுதி செய்துவிட்டு சேனல் ஐ மாற்றிவிட்டேன்.பின்னே, அவரின் லீலைகள் முழுவதையும் காட்டிவிடுவார்கள் போலிருந்தது.வீட்டில் அப்பா,அம்மா,மனைவியுடன் பார்க்க முடியுமா?

உண்மையை சொல்லப் போனால் நான் நித்யானந்தா வின் மேல் கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தேன்.கல்பதரு நிகழ்ச்சிக்கு செல்லலாம் என்று நினைத்திருந்தேன்.அதற்காக நான் தொடர்பு கொண்ட போது,கட்டணம் 5000 ரூபாய், 2000 ரூபாய் என்றார்கள்.ஜகா வாங்கிவிட்டேன்.ஆனால் இப்பொழுது வந்திருப்பது செக்ஸ் scandal .மேற்கொண்டு ஏதாவது வருமா தெரியவில்லை.மக்களின் கடவுள் பக்தியை குலைக்க நாத்திகர்கள் தேவையில்லை.இந்த மாதிரி சாமியார்களே போதும்.

இதையும் தாண்டி அவருக்கு ஏதும் விசேஷ சக்திகள் இருக்குமோ என்னவோ? யார் கண்டது? சாரு போன்றவர்கள் தான் தான் சொல்ல வேண்டும்.


வசூல் ராஜா படத்தில் கமல் சொல்வார்."கடவுள் இல்லை என்று சொல்பவனை நம்பலாம்.கடவுள் இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம். ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்பவனை மட்டும் நம்பாதே! நீ பூட்ட கேசா ஆயிடுவே! " உண்மையோ என்று தோன்றுகிறது.

இது பற்றி இன்னும் விரைவாக பின்னர் எழுதுகிறேன்..

கருத்துகள் இல்லை: