புதன், 3 மார்ச், 2010

2010 ன் சூப்பர் ஹிட் பாடல்- உருவான விதம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வாசகர்களில் பலர் ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்று தெரியாமல் இருக்கலாம்! எதற்கு கவலை பொழுது போகாமல் சும்மா ஒருவன் இருக்கும் பொழுது? இதோ உங்கள் ஆசையை நிறைவேற்றவே இந்த பதிவு.(இதில் குறிப்பிடுவன அனைத்தும் கற்பனையே...(என்று நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்)).

கோடம்பாக்கத்தில் ஒரு பிரபலமான ரெகார்டிங் தியேட்டர்.உள்ளே சற்று எட்டிப் பார்த்தேன்.ஆனந்த அதிர்ச்சி அடைந்தேன்.தமிழகத்தின் பெரிய தளபதி,சிறிய தலை,vice கேப்டன் அஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க பாடல் பதிவு அது.கூடவே மியூசிக் டைரக்டர் பழைய ராஜா.........(அய்யய்யோ அவர் வேண்டாம்...வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்).............சரி... யாரோ ஒருத்தர்...பெயரில் என்ன இருக்கிறது?

டைரக்டர் சிற்றரசு,கவிஞர் வயிர குத்து வும் கூட இருக்க, ஆரம்பமாகிறது இந்த வருடத்திக்கான குத்து பாட்டு.

அஜய்: சார்!இந்த ஒபெனிங் பாட்டை வைச்சு தான் இந்த படத்தை ஓட்டணும்.அதனாலே பாட்டு படு fast ஆ இருக்கணும்.
மி.டை:பிரமாதமா பண்ணிடலாம் சார்!நாம வழக்கமா பண்றதுதானே?
டைரக்டர்:ஆமா சார்!இந்த தடவையும் அதே மாதிரிதான்!மாத்தி கீது போட்டுடாதீங்க!
மி.டை:அது எப்படி சார் பண்ணுவேன்?எனக்கு தெரியாதா?அடுத்த முதல்வருக்கு எப்படி பாட்டு போடணும்னு?
வயிர குத்து:கவலை விடுங்கள்!உரலை எடுங்கள்!என் வரிகளுக்கேற்ற சரியான குரலைப் பிடிங்கள்!
அஜய்: ஆளாளுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க! ட்யூனைப் போடுங்க!
மி.டை:இதோ ரெடி......

தான தானா தானன்னதானா
தான தான தன்னன்னா தனன்னா
லால லால லாலா லல்லல்ள்ளலாலல்லா
டங்கு தங்கு டங்கு
டுங்கு டுங்குடு டுங்கு

மி.டை:இதுதான் பல்லவி.
அஜய் :கவிஞரே!நல்லா பாத்துக்குங்க!பல்லவிலேயே என் எதிரிகளுக்கேல்லாம் பஞ்ச் வைக்கணும்!
வயிர குத்து:வைத்தால் போயிற்று!இதைக்கேளுங்கள்!

நான் தாண்டா தமிழ்நாட்டின் சொத்து
வாங்கிக்கடா என்னோட குத்து!
நான் அடிச்சா வாங்கிடுவே நீ டிக்கெட்டு,
ஏன்னா ஏற்கனவே நீ அப்பீட்டு! நான்தாண்டா
எம்.ஜி.ஆரின் ரிப்பீட்டு!

வயிர குத்து:எப்படி என் வரிகள்!?

மி.டை:ரொம்ப பிரமாதம் கவிஞரே!ஆனா எம்.ஜி.ஆர். பேர் வருதே,ஏதும் பிரச்சனை ஆயிடுமோ?
டைரக்டர்:என்னங்க பேசுறீங்க நீங்க!படத்தை நாமா ரிலீஸ் பண்ண போறோம்.கன் பிச்சர்ஸ் தானே?ஒருத்தரும் பிரச்சனை பண்ண மாட்டாங்க!
மி.டை:மத்த பக்கம் ஓகே!ஆனா மதுரையிலே கண்டிப்பா பிரச்சனை வரும்!அங்க அவங்களால ஒண்ணும் பண்ண முடியாதே?
அஜய்: ஆமாமாம்!எதுக்கும் நீங்க அதை மாத்திடுங்க!
வயிர குத்து:அப்படியென்றால் எம்.ஜி.ஆருக்கு பதிலா வாத்தியார் ன்னு போட்டுக்கலாம்.
டைரக்டர்:சூப்பர்ங்க!யாராவது கேட்டா,அண்ணனோட மூணாங் கிளாஸ் வாத்தியார்ன்னு சொல்லிக்கலாம்!
மி.டை:சரி!அடுத்து சரணம்!

இதோ,

தான தானா தானன்னதானா
தான தான தன்னன்னா தனன்னா
லால லால லாலா லல்லல்ள்ளலாலல்லா
டங்கு தங்கு டங்கு
டுங்கு டுங்குடு டுங்கு,

அஜய்:சார்!சரணத்துல கண்டிப்பா நான் என் ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணியே ஆகணும் சார்!
டைரக்டர்:ஆமாம் சார்!அதிலேயும் ஏதாவது அம்மா செண்டிமெண்ட் ரெண்டு சேத்து விடுங்க!
வயிர குத்து:
இதைக் கேளுங்கள்!

நாலு காலு இருக்கறதுதான்டா நாய்! உன்னை
பெத்தவதாண்டா உன்னோட தாய்!அவளுக்கு
போடாதடா கிழிஞ்ச பாய்!

அஜய்:சார் அப்படியே அந்த உழைப்பு மேட்டர்..........

வெய்யில்ல போனா வேர்க்கும்-அது
தான எல்லாரையும் ஈர்க்கும்-உழைச்சி பாரு
வாழ்க்கை இனிக்கும்.

அஜய்: ஆஹா பிரமாதம்!
மி.டை:இப்போ கடைசி சரணம்!

தான தானா தானன்னதானா
தான தான தன்னன்னா தனன்னா
லால லால லாலா லல்லல்ள்ளலாலல்லா
டங்கு தங்கு டங்கு
டுங்கு டுங்குடு டுங்கு

அஜய்: சார் இதுலே ஏதாவது தத்துவம் சொல்லுங்க சார்!என் ரசிகர்களுக்கு உதவியா இருக்கும்!

வயிர குத்து:

பாதையிலே திரிவானே பைத்தியக் காரன்
போதையிலே திரிவானே குடி காரன்
கீதையிலே சொன்னானே அன்று கண்ணன்,
பாட்டில் சொல்கிறேனே நான் உன் மன்னன்.
நல்லவர்க்கெல்லாம் நான்தானே அண்ணன்.

பாட்டிலில் இருக்கு பெப்சி
மாருதி விட்டது ஜிப்சி-நாலு நாள்
குளிக்கலன்னா ஆயிடுவே கப் சி!

அஜய்: ஆஹா லைன் ரொம்ப பிரமாதம் சார்!
டைரக்டர்:மியூசிக் டைரக்டர் சார்! அப்படியே முழுப்பாட்டும் பாடிக்காட்டிடுங்க!
அந்த கீதை மேட்டர் வர்ற இடத்துல மட்டும் background ல ஏதாவது சமஸ்க்ருத சுலோகம் போட்டுடுங்க கேட்கறதுக்கு டச்சிங்கா இருக்கும்.
அஜய்: இதுக்கு தான் சார் உங்களை மாதிரி புது டைரக்டர் படம் பண்றது!எவ்வளவு different ஆ யோசிக்கறீங்க?உண்மையிலேயே சூப்பர் சார்!
டைரக்டர்:ரொம்ப தேங்க்ஸ் சார்! அதே மாதிரி இடையிலே இங்கிலிஷோ, இல்லை புரியாத மாதிரி ஏதாவது ரெண்டு மூணு கேட்சிங் வோர்டை சேத்துவிட்டுடுங்க! பாட்டு ஹிட் ஆக அது ரொம்ப முக்கியம்!
அஜய்: ஆமாம் சார்!படம் பேர் தமிழ்ல வைச்சாத்தான் வரிவிலக்கு!பாட்டுக்கெல்லாம் இல்லை!எதுக்கு தேவையில்லாம அசிங்கமா பாட்டு முழுசும் தமிழ்லேயே இருக்கணும்?
மி.டை:எனக்கு தெரியாதா சார்?நான் என்ன இன்னிக்கு நேத்தா பீல்டுக்கு வந்தேன்?அசத்திடுறேன் பாருங்க!

"பிளிலாக்கி பிளிபிளிப்பி,பில்லிலாக்கி பிம்பலக்க லாலி,லாலி,லாலி.

நான் தாண்டா தமிழ்நாட்டின் சொத்து
வாங்கிக்கடா என்னோட குத்து!
நான் அடிச்சா வாங்கிடுவே நீ டிக்கெட்டு,
ஏன்னா ஏற்கனவே நீ அப்பீட்டு! நான்தாண்டா
வாத்தியாரின் ரிப்பீட்டு!

கோரஸ்:get thelife for u,fix the life for u achieve the life for u.

நாலு காலு இருக்கறதுதான்டா நாய்! உன்னை
பெத்தவதாண்டா உன்னோட தாய்!அவளுக்கு
போடாதடா கிழிஞ்ச பாய்!
வெய்யில்ல போனா வேர்க்கும்-அது
தான எல்லாரையும் ஈர்க்கும்-உழைச்சி பாரு
வாழ்க்கை இனிக்கும். (நான் தாண்டா )

(பரித்ராணாய சாதூர்நாம் வினாத்ராய என்று பகவத் கீதை சுலோகம் ஓடுகிறது.)


பாதையிலே திரிவானே பைத்தியக் காரன்
போதையிலே திரிவானே குடி காரன்
கீதையிலே சொன்னானே அன்று கண்ணன்,
பாட்டில் சொல்கிறேனே நான் உன் மன்னன்.
நல்லவர்க்கெல்லாம் நான்தானே அண்ணன்.

(நான் தாண்டா )

பிளிலாக்கி பிளிபிளிப்பி,பில்லிலாக்கி பிம்பலக்க லாலி,லாலி,லாலி

பாட்டிலில் இருக்கு பெப்சி
மாருதி விட்டது ஜிப்சி-நாலு நாள்
குளிக்கலன்னா ஆயிடுவே கப் சி!

கோரஸ்:get thelife for u,fix the life for u achieve the life for u.


ஆகா, 2010 ன் சூப்பர் ஹிட் பாட்டை முதன் முதலாக கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
என்ன பாட்டு! பிளிலாக்கி பிளிபிளிப்பி,பில்லிலாக்கி பிம்பலக்க லாலி,லாலி,லாலி.............................................................................

கருத்துகள் இல்லை: