வெள்ளி, 11 ஜூன், 2010

சாரு மற்றும் நீயா? நானா? சர்ச்சை-கடைசி பதிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கடந்த சில நாட்களாக பதிவர்களிடையே மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் என் கருத்தை பதிவு செய்ய வேண்டியிருப்பது,சாரு வின் ரசிகனாக மட்டும் அல்ல.ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் அவசியமாகிறது.அவை,

1 . சாருவை அந்த நிகழ்ச்சியில் அவமானப்படுத்தியதாக சொல்லப்படுவது பற்றி......................

யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.சாருவும் அப்படித்தான்.இதை அவரே ஒத்துக்கொள்வார்.சாரு நித்தி யை ஆதரித்தது தவறு என்று
கோபி(ஆண்டனி?!) கூறியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.அது அவர்கள் கருத்து.இதில் நாம் சொல்ல ஒன்றுமில்லை.சாருவாச்சு கோபியாச்சு என்று விட்டு விடலாம்.ஆனால் அதை நீங்கள் ஒத்துக்கொண்டு உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று அவரை வற்புறுத்தியது மிகுந்த கண்டனத்துக்குரியது."நீ செய்தது தவறு என்று யாரிடம் வேண்டுமானாலும் சொல்ல எனக்கு உரிமையிருக்கிறது.ஆனால் அதை அவர்கள் ஏற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று நான் நினைத்தால் அது சர்வாதிகாரம் அன்றி வேறேதும் இல்லை."என்பதே என் கருத்து.அதன்படி பார்த்தால் இவ்விஷயத்தில் நீயா நானா குழுவினருக்கும்,அதன் இயக்குனர் ஆண்டனி,ஒளிபரப்பிய விஜய் டிவி அனைவருக்கும் எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

2 .சாரு- நித்தி exposure முன் பின்.................

இதை விவாதிக்க சாரு வின் வாசகர்களை தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லை.ஏனெனில் சாரு வை முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே இவ்விஷயத்தை பற்றி ஒரு சரியான முடிவிற்கு வரமுடியும்.நித்தி exposure ஐ சாரு சற்று பரிதாபமாக தான் எதிர்கொண்டார் என்றே நான் கருதுகிறேன்.
"ஆமாம் அப்படிதாண்டா எழுதுவேன்.என் இஷ்டம்" என்று இவர்கள் முகத்தில் அடித்தமாதிரி சொல்லியிருக்க வேண்டும்.ஏனெனில், அவர் எழுதிய,எழுதிக்கொண்டிருக்கும் உலக இலக்கியங்களையும்,நவீன இசைச் சூழலையும்,திரைப்பட,சமூக விஷயங்களையும்(புத்தகங்களை விடுங்கள்) படிக்காத மூடர்கள் தான் இன்று அவர் நித்தி இடம் லட்ச லட்சமாக பணம் வாங்கிகொண்டு எழுதினார் என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றனர்.
என் போன்ற வாசகர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.அவர் அனுபவித்ததை எழுதினார்.அவர் எழுதியதை நாங்கள் அனுபவித்தோம்.அவ்வளவுதான்.ஒரு வேளை,அவர் நித்தியிடம் பணம் வாங்கியிருந்தாலும் எனக்கு ஒரு கவலையுமில்லை.எனக்கு என்ன வேண்டுமோ? அது சாருவின் எழுத்தில் எனக்கு கிடைக்கிறது.அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்?எப்படி சம்பாதிக்கிறார்? என்பதெல்லாம் தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வமில்லை.
நான் என்ன income tax அதிகாரியா?

ஆனால் ஒன்று, சாருவின் "தப்புத்தாளங்கள்" புத்தகத்தில் நித்தி யின் லீலைகள் குறித்து ஒரு பகுதி வருகிறது.2004 ம் ஆண்டு வாக்கிலேயே சாருவுக்கு நித்தியை பற்றி நியூஸ் கிடைத்துள்ளது.இது பற்றி சாருவிடம் சற்று வேகமாகவே தொலைபேசியிலும்,கடிதத்திலும் தொடர்பு கொண்டபோது, அவர் அதற்கு அளித்த விளக்கம் எனக்கு ஏற்று கொள்ளக்கூடியதாக இருந்தது.பிற்பாடு நான் குறிப்பிட்டதை குமுதம் ரிப்போர்ட்டரில் வரும் தொடரில் பயன்படுத்திகொள்வதாக கூறினார். அதை குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை . நான் அந்த மாதிரி புத்தகங்களை வாங்குவதில்லை.எப்படியும் புத்தக வடிவில் வரும் காசு கொடுத்து வாங்கி பத்திரப் படுத்தி கொள்ளலாம்.

3 . இனி விஜய் டிவியில் சாரு?............................

இது விஜய் டிவி நிறுவனத்துக்கும் சாருக்கும் இடையில் உள்ளது.அவர்கள் கண்டிப்பாக திரும்பவும் அழைப்பார்கள்.அப்பொழுது சாரு கலந்து கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.இவ்விஷயத்தில் நம் எழுத்தாளர்கள் சற்று அரசியல்வாதிகளை போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து

4 கருத்துகள்:

Manithan சொன்னது…

What you have written is nonsense. I hope you have no other works. Please do not pollute the blog with such article.

வெப் தமிழன் சொன்னது…

இது arivuputhiran.blogspot.com மாறி சாரு தன்னை தானே புகழ்ந்து எழுதிக்கொள்ளும் ஒரு பதிவா? :)

Dude, if this Charu can character assasinate other persons, then he gives permission to others to do the same for him.

"தன்னை தானே தாழ்த்திகொள்கிறவனே உயர்த்தப்படுவான்” , இவர் எப்பொழுது திருந்துகிறாரோ அதுவரைக்கும் தாழ்த்தப்படுவார் :)

வெப் தமிழன் சொன்னது…

இது தொடர்வதற்க்காக....

buvanesh சொன்னது…

பின்னூட்டத்திற்கு நன்றி மனிதன்.............என் எழுத்தை நான்-சென்ஸ் என்று சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது.ஆனால் என்னை எழுதகூடாது என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.