வெள்ளி, 11 ஜூன், 2010

சாரு மற்றும் நீயா? நானா? சர்ச்சை-கடைசி பதிவு


கடந்த சில நாட்களாக பதிவர்களிடையே மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் என் கருத்தை பதிவு செய்ய வேண்டியிருப்பது,சாரு வின் ரசிகனாக மட்டும் அல்ல.ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் அவசியமாகிறது.அவை,

1 . சாருவை அந்த நிகழ்ச்சியில் அவமானப்படுத்தியதாக சொல்லப்படுவது பற்றி......................

யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல.சாருவும் அப்படித்தான்.இதை அவரே ஒத்துக்கொள்வார்.சாரு நித்தி யை ஆதரித்தது தவறு என்று
கோபி(ஆண்டனி?!) கூறியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.அது அவர்கள் கருத்து.இதில் நாம் சொல்ல ஒன்றுமில்லை.சாருவாச்சு கோபியாச்சு என்று விட்டு விடலாம்.ஆனால் அதை நீங்கள் ஒத்துக்கொண்டு உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று அவரை வற்புறுத்தியது மிகுந்த கண்டனத்துக்குரியது."நீ செய்தது தவறு என்று யாரிடம் வேண்டுமானாலும் சொல்ல எனக்கு உரிமையிருக்கிறது.ஆனால் அதை அவர்கள் ஏற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று நான் நினைத்தால் அது சர்வாதிகாரம் அன்றி வேறேதும் இல்லை."என்பதே என் கருத்து.அதன்படி பார்த்தால் இவ்விஷயத்தில் நீயா நானா குழுவினருக்கும்,அதன் இயக்குனர் ஆண்டனி,ஒளிபரப்பிய விஜய் டிவி அனைவருக்கும் எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

2 .சாரு- நித்தி exposure முன் பின்.................

இதை விவாதிக்க சாரு வின் வாசகர்களை தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லை.ஏனெனில் சாரு வை முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே இவ்விஷயத்தை பற்றி ஒரு சரியான முடிவிற்கு வரமுடியும்.நித்தி exposure ஐ சாரு சற்று பரிதாபமாக தான் எதிர்கொண்டார் என்றே நான் கருதுகிறேன்.
"ஆமாம் அப்படிதாண்டா எழுதுவேன்.என் இஷ்டம்" என்று இவர்கள் முகத்தில் அடித்தமாதிரி சொல்லியிருக்க வேண்டும்.ஏனெனில், அவர் எழுதிய,எழுதிக்கொண்டிருக்கும் உலக இலக்கியங்களையும்,நவீன இசைச் சூழலையும்,திரைப்பட,சமூக விஷயங்களையும்(புத்தகங்களை விடுங்கள்) படிக்காத மூடர்கள் தான் இன்று அவர் நித்தி இடம் லட்ச லட்சமாக பணம் வாங்கிகொண்டு எழுதினார் என்று குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றனர்.
என் போன்ற வாசகர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.அவர் அனுபவித்ததை எழுதினார்.அவர் எழுதியதை நாங்கள் அனுபவித்தோம்.அவ்வளவுதான்.ஒரு வேளை,அவர் நித்தியிடம் பணம் வாங்கியிருந்தாலும் எனக்கு ஒரு கவலையுமில்லை.எனக்கு என்ன வேண்டுமோ? அது சாருவின் எழுத்தில் எனக்கு கிடைக்கிறது.அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்?எப்படி சம்பாதிக்கிறார்? என்பதெல்லாம் தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வமில்லை.
நான் என்ன income tax அதிகாரியா?

ஆனால் ஒன்று, சாருவின் "தப்புத்தாளங்கள்" புத்தகத்தில் நித்தி யின் லீலைகள் குறித்து ஒரு பகுதி வருகிறது.2004 ம் ஆண்டு வாக்கிலேயே சாருவுக்கு நித்தியை பற்றி நியூஸ் கிடைத்துள்ளது.இது பற்றி சாருவிடம் சற்று வேகமாகவே தொலைபேசியிலும்,கடிதத்திலும் தொடர்பு கொண்டபோது, அவர் அதற்கு அளித்த விளக்கம் எனக்கு ஏற்று கொள்ளக்கூடியதாக இருந்தது.பிற்பாடு நான் குறிப்பிட்டதை குமுதம் ரிப்போர்ட்டரில் வரும் தொடரில் பயன்படுத்திகொள்வதாக கூறினார். அதை குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை . நான் அந்த மாதிரி புத்தகங்களை வாங்குவதில்லை.எப்படியும் புத்தக வடிவில் வரும் காசு கொடுத்து வாங்கி பத்திரப் படுத்தி கொள்ளலாம்.

3 . இனி விஜய் டிவியில் சாரு?............................

இது விஜய் டிவி நிறுவனத்துக்கும் சாருக்கும் இடையில் உள்ளது.அவர்கள் கண்டிப்பாக திரும்பவும் அழைப்பார்கள்.அப்பொழுது சாரு கலந்து கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.இவ்விஷயத்தில் நம் எழுத்தாளர்கள் சற்று அரசியல்வாதிகளை போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து

வியாழன், 10 ஜூன், 2010

வந்துட்டேன்!

கடந்த 2 மாதங்களாக எந்த பதிவும் போடாமல் ஊர் சுற்றிகொண்டிருந்த என்னை,கடிதம்,தொலைபேசி,ஈமெயில்,sms ,கொரியர் சர்வீஸ்,புறா என்று பல வழிகளில் தொடர்பு கொண்ட லட்சோப லட்சம் அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி.கடந்த இரு மாதமாக அண்டார்டிக்கா வில் நடந்த world english red language மாநாட்டிற்கு சென்றுவிட்டதால் எந்த பதிவையும் இட முடியவில்லை.அந்த மாநாட்டிற்கு சென்று வந்ததின் மூலம் இங்கிலீஷ் அறிஞர் என்ற பட்டமும் எனக்கு கிடைத்திருக்கிறது என்பதை உள மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறேன்.இனி, நாளை முதல் வழக்கம் போல் பதிவுகள் தொடரும்.

பின் குறிப்பு:
அது யாருங்க அது பதிவை படிக்கும் போது ஆயுதங்களை எடுக்கறது? என்ன பழக்கம் இது?அடிச்சா உடையறது உங்க monitor தான்! பாத்துகிடுங்க!எவன் எவனோ என்னென்னமோ கதை வுடறான்!அதை எல்லாம் நம்பறீங்க!நான் சொன்னா நம்பமாட்டீங்களா?!